லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 3,400ஐ தாண்டியது!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 3,400ஐ தாண்டியது!

லெபனானைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களினால் உயிரிழந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,412ஆக உயர்வடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன், இந்தத் தீவிர இராணுவத் தாக்குதல்கள் காரணமாக மேலும் 10,269 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

லெபனான் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தியோகபூர்வ தரவு அறிக்கையானது, கடந்த மார்ச் மாதம் 02ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி (இன்றைய தினம்) வரையான காலப்பகுதியில் பதிவான ஒட்டுமொத்த உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.