இலங்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு - அரசு அறிவிப்பு

இலங்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு - அரசு அறிவிப்பு

பேரிடர் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611  ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகளவான உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. இதன்படி, கண்டி மாவட்டத்தில் 232 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் 213 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரிடர் காரணமாக நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் 956 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 4,309 என்றும், மேலும் 69,635 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானொலி