"கனடாவில் கணக்கியல் துறையில் தகுதி பெற்றவர்களாக பணியாற்றி வரும் கணக்காளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு பல ஆண்டுகளாக எமது சங்கம் இயங்கிவருகின்றது. இவ்வாறாக. எமது துறை சார்ந்த அங்கத்தவர்களுக்கான பல சேவைகளுடன் புலு நற்பணிகளையும் நாம் ஆற்றிவருகின்றோம். அவற்றுள், தாயகத்தில் ஊனமுற்ற பல்கலைக் கழக மாணவர்களுக்கு உதவுவது போன்ற நற்காரியங்களிலும் எமது சங்கம் ஈடுபட்டு வருகின்றது
அத்துடன் எமது சங்கத்தின் வழிகாட்டுதலில் பல புதிய கண்காளர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய இராப்போசன விருந்து ஒன்றுகூடலின் மூலம் நாம் எமது கலை மற்றும் பண்பாடு போன்றவற்றையும் கொண்டாடும் அதே வேளை கணக்காளர்கள் என்ற துறைசார்ந்த பணிகளையும் வெற்றிகளையும் கொண்டாடுவது முக்கியமான நோக்கமாகும்".
இவ்வாறு கடந்த வார இறுதியில் ஸ்காபுறோவில் நடைபெற்ற கனடிய தமிழ் கணக்காளர்கள் சங்கத்தின் 23வது ஆண்டு இராப்போசன விருந்தில் தலைவி ஜனனி சிவசுதன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சுமார் 400 பேர் அளவில் கலந்து சிறப்பித்த இந்த வைபவத்தில் பல துறைசார்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.