போர்நிறுத்தம் ஆபத்தில் - ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய இராணுவம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

போர்நிறுத்தம் ஆபத்தில் - ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய இராணுவம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

தெற்கு லெபனானில் தங்கியுள்ள தமது படையினரை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் பல ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்குப் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் பதிவான மிக மோசமான சம்பவமாக இது கருதப்படுகிறது.

இதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் மீண்டும் கடும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.