ஈரான் எண்ணெய் கொள்முதல்: சீன சுத்திகரிப்பு நிலையத்திற்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிப்பு!

ஈரான் எண்ணெய் கொள்முதல்: சீன சுத்திகரிப்பு நிலையத்திற்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிப்பு!

வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் இந்த வார இறுதியில் மற்றுமொரு சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஈரானிடமிருந்து பில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான எண்ணெயைக் கொள்முதல் செய்த சீனாவிலுள்ள சுயாதீன சுத்திகரிப்பு நிலையம் (Teapot refinery) ஒன்றிற்கு எதிராக அமெரிக்கா வெள்ளிக்கிழமை தடைகளை விதித்துள்ளது.

ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒன்றாகக் கருதப்படும் 'ஹெங்லி பெட்ரோகெமிக்கல்' (Hengli Petrochemical) சுத்திகரிப்பு நிலையத்தை அமெரிக்க திறைசேரி திணைக்களம் இலக்கு வைத்துள்ளது.

நிழல் கடற்படை (Shadow Fleet): ஈரானின் நிழல் கடற்படையின் ஒரு பகுதியாகச் செயல்படும் சுமார் 40 கப்பல் நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கும் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) தடைகளை விதித்துள்ளது.

"சட்டவிரோதமான" ஒருதலைப்பட்ச தடைகளைத் தான் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

வாஷிங்டனிலுள்ள சீனத் தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சாதாரண வர்த்தகம் பாதிக்கப்படக்கூடாது என்றும், சீன நிறுவனங்களை இலக்கு வைக்கப் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா "துஷ்பிரயோகம்" செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.