உலகளாவிய எண்ணெய் நெருக்கடி புதைபடிவ எரிபொருள் தொழில்துறையை மாற்றிவிட்டது!

உலகளாவிய எண்ணெய் நெருக்கடி புதைபடிவ எரிபொருள் தொழில்துறையை மாற்றிவிட்டது!

ஈரான் போரினால் தூண்டப்பட்ட எண்ணெய் நெருக்கடி புதைபடிவ எரிபொருள் (Fossil fuel) தொழில்துறையை என்றென்றும் மாற்றியுள்ளது.

நாடுகள் தமது எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த புதைபடிவ எரிபொருட்களை விட்டு விலகிச் செல்கின்றன என்று உலகின் முன்னணி எரிசக்தி பொருளாதார நிபுணர் ஃபாத்தி பிரோல் (Fatih Birol) தெரிவித்துள்ளார்.

சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஃபாத்தி பிரோல், 'தி கார்டியன்' (The Guardian) இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்ததாவது:

நம்பிக்கை இழப்பு மற்றும் புதிய மாற்றம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் முக்கிய விளைவு என்னவென்றால், நாடுகள் புதைபடிவ எரிபொருட்கள் மீதான நம்பிக்கையை இழக்கும் மற்றும் அவற்றுக்கான தேவை குறையும்.

"அவர்களின் அபாயம் மற்றும் நம்பகத்தன்மை குறித்த பார்வை மாறும். அரசாங்கங்கள் தமது எரிசக்தி மூலோபாயங்களை (Energy strategies) மறுபரிசீலனை செய்யும். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்திக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும்" என்று அவர் கூறினார்.

திரும்பப் பெற முடியாத பாதிப்பு இந்த நெருக்கடியிலிருந்து மீள்வது சாத்தியமற்றது என்று கூறிய பிரோல், "பூச்சாடி உடைந்துவிட்டது, பாதிப்பு ஏற்பட்டுவிட்டது - அந்தத் துண்டுகளை மீண்டும் ஒன்றிணைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

இது வரவிருக்கும் ஆண்டுகளில் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் நிரந்தர விளைவுகளை ஏற்படுத்தும்" என எச்சரித்தார்.

பிரித்தானியாவின் வடகடல் விரிவாக்கம் பிரித்தானியா தனது வடகடல் (North Sea) எண்ணெய் அகழ்வு விரிவாக்கத்தைக் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தப் புதிய எண்ணெய் வயல்கள் பிரித்தானியாவின் எரிசக்தி பாதுகாப்பிலோ அல்லது சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வணிக ரீதியாகப் பார்த்தாலும், புதிய அகழ்வாராய்ச்சிகளில் பாரிய முதலீடுகளைச் செய்வது தர்க்கரீதியானதாக இருக்காது என அவர் எச்சரித்தார்.

உலகப் பொருளாதாரம் பிணைக் கைதியாக இந்த நெருக்கடி முந்தைய அனைத்துப் பெரிய நெருக்கடிகளை விடவும் பெரியது என்று கூறிய பிரோல், "வெறும் 50 கி.மீ நீளமுள்ள ஹார்முஸ் (Hormuz) நீரிணையால் உலகப் பொருளாதாரம் பிணைக் கைதியாகப் பிடிக்கப்படுவதை இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று தெரிவித்தார்.

காலநிலை மற்றும் எதிர்காலம் சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் தற்போது நிலக்கரியுடன் போட்டியிடும் வகையில் செலவு குறைந்தவையாக மாறியுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது என்பது எவரும் வருத்தப்படாத ஒரு தெரிவு என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் கொலம்பியாவில் நடைபெறவுள்ள, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வது குறித்த உலகின் முதலாவது சர்வதேச மாநாட்டில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.