பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ளனர்.
விஜயத்தின் முக்கியத்துவம்: மன்னர் சார்லஸின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படும் மிக உயர்மட்ட மற்றும் முக்கியமான அரச விஜயமாக இது கருதப்படுகிறது.
அமெரிக்கா பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதன் 250 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
அத்துடன், இரண்டு தசாப்தங்களின் பின்னர் பிரித்தானிய மன்னர் ஒருவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
வரவேற்பு: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அரச தம்பதியினரை அன்புடன் வரவேற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சந்திப்புகள்: வாஷிங்டனின் முக்கிய பிரமுகர்கள், ஊடகத் தலைவர்கள், அமெரிக்க செனட்டர் டெட் க்ரூஸ், திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் மற்றும் ஏனைய நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்டோருடன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் சுமூகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சி நிரல்: இந்த விஜயத்தின் போது அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றுதல், வெள்ளை மாளிகையில் நடைபெறும் பிரம்மாண்டமான அரச விருந்து மற்றும் நியூயோர்க் நகருக்கான விஜயம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
விசேட அம்சம்: கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் இரவு விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் தலைநகரில் இன்னும் பதற்றமான சூழல் நிலவி வரும் பின்னணியில் இந்த விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.