அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தம், இருதரப்புக்கும் இடையே அமைதிப்பேச்சு நடந்து ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை அமுலில் இருக்கும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நடந்த முதல்கட்ட பேச்சு தோல்வியில் முடிந்தது. இரண்டாம் கட்ட பேச்சு நடத்துவதற்கான முயற்சிகள் நடந்தன.
ஆனால், இரு தரப்பும் மாறி மாறி நிபந்தனைகளை முன்வைத்ததால், பேச்சு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மத்தியஸ்தராக செயல்பட பாகிஸ்தானுக்கு தகுதி இருக்கிறதா என ஈரானின் தஷ்டெஸ்தான் மாகாணத்தின் எம்.பி. இப்ராஹிம் ரெஸாயி கடுமையாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, பாகிஸ்தான் நல்ல நண்பன் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் மத்தியஸ்தத்திற்கு தேவையான நம்பகத்தன்மை அதனிடம் இல்லை. பாகிஸ்தான் பெரும்பாலும் அமெரிக்காவின் நலன்களையே கருத்தில் கொள்கின்றது.
அமெரிக்காவின் முரண்பாடுகளுக்கு எதிராக பேச மறுக்கின்றது. ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுபவரை ஒரு நேர்மையான மத்தியஸ்தராக ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.