மேற்காசிய அமைதிக்கு ரஷ்யா தயார் – புட்டின்

மேற்காசிய அமைதிக்கு ரஷ்யா தயார் – புட்டின்

மேற்காசியாவில் அமைதியை உறுதி செய்ய ரஷ்யா தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி உடனான சந்திப்பில் ரஷ்ய ஜனாதிகதி புட்டின் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதோடு ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதனால் சர்வதேச அளவில் மசகு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 8 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. தற்போது அதை காலவரையின்றி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நீட்டித்துள்ளார். இரண்டு தரப்பும் இது தொடர்பாக இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகின்றது. பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்காவுக்கு மூன்று நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

இந்தச் சூழலில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷ்யா பயணித்துள்ளார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி புட்டினை அவர் சந்தித்தார். இந்தப் போரில் தங்களுக்கு ஆதரவாக ரஷ்யா இருப்பதற்கு புட்டின் அரக்சி நன்றி தெரிவித்தார்.

“மேற்காசியாவில் அமைதியை விரைந்து உறுதி செய்ய எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய ரஷ்யா தயாராக உள்ளது” என்று அப்போது புட்டின் தெரிவித்துள்ளார். இதை ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளார்.