அமெரிக்கக் கடவுச்சீட்டுகளில் (Passports) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவத்தை உள்ளடக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படவுள்ள விசேட வரையறுக்கப்பட்ட பதிப்பு (Limited Edition) கடவுச்சீட்டிலேயே இந்த உருவம் அச்சிடப்படவுள்ளது.
ஒரு ஜனநாயக நாட்டில் பதவியில் இருக்கும் தலைவரின் உருவம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது மிகவும் அரிதான ஒரு விடயமாகக் கருதப்படுகிறது. இது ஒரு வரலாற்றுச் சம்பவமாக அமையலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.