2027 நிதியாண்டிற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் முன்மொழியப்பட்டுள்ள 1.5 ட்ரில்லியன் டொலர் பெறுமதியான பிரம்மாண்ட பாதுகாப்பு வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு, தற்போதைய அவசரத் தேவையை பிரதிபலிக்கிறது என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.
இந்த விசேட வரவுசெலவுத் திட்ட கோரிக்கைக்கு ஆதரவாக சாட்சியமளிப்பதை தாம் பாராட்டுவதாக ஹெக்செத் குறிப்பிட்டுள்ளார். "ஜனாதிபதியின் இந்த கோரிக்கை தற்போதைய காலத்தின் அவசரத் தேவையை நிரூபிக்கிறது" என அவர் மேலும் கூறினார்.
பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படைகள் குழு விசாரணையில் கலந்துகொண்ட பென்டகன் அதிகாரி ஜூல்ஸ் ஹர்ஸ்ட் (Jules Hurst), ஈரான் போருக்காக இதுவரை செலவிடப்பட்ட மொத்தத் தொகை குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.
அவரது கூற்றுப்படி, இதுவரை போருக்காக 25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இதில் பெரும்பகுதி போர்க்கருவிகள் மற்றும் வெடிபொருட்களுக்காக (Munitions and Ammunition) செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.