டொராண்டோவில் சுயநினைவற்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த இருவருக்கு 9 ஆண்டுகள் சிறை!

டொராண்டோவில் சுயநினைவற்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த இருவருக்கு 9 ஆண்டுகள் சிறை!

டொராண்டோவில் அடையாளம் தெரியாத மற்றும் சுயநினைவற்ற நிலையில் இருந்த பெண்ணொருவரை "கொொடூரமான மற்றும் முற்றிலும் இழிவான" முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக இரண்டு நபர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஒன்டாரியோ நீதிமன்ற நீதிபதி இந்த வாரம் தீர்ப்பளித்துள்ளார்.

2024 ஆகஸ்ட் 22 அன்று டவுன்டவுன் பொது வீட்டுவசதி வளாகத்தின் படிக்கட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது அங்கிருந்த பாதுகாப்பு கமராவில் (CCTV) பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், "ஜேன் டோ" (Jane Doe) என்று அழைக்கப்படுகிறார்; அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை அல்லது பொலிஸில் புகார் அளிக்க முன்வரவில்லை.

இந்த வழக்கை "அசாதாரணமான விசாரணை" என்று குறிப்பிட்ட நீதிபதி ப்ரோக் ஜோன்ஸ் (Justice Brock Jones) தனது தீர்ப்பில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்: "ஜேன் டோவிற்கு நடந்தது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது.

ஒரு அப்பாவி, சுயநினைவற்ற பெண் படிக்கட்டு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு இருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். அவர்கள் அவளை ஒரு உயிரற்ற பொருளைப் போல நடத்திய விதம் முற்றிலும் கொடூரமானது."

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த வன்புணர்வு சம்பவத்தில், குற்றவாளிகளான ஜேசன் பார்ட்லி (59) மற்றும் கேரி பெக்ஃபோர்ட் (56) ஆகியோர் அந்தப் பெண்ணை மாறி மாறி துன்புறுத்தியுள்ளனர்.

அந்தப் பெண் இடையில் ஒருமுறை நினைவுக்கு வந்து அவர்களைத் தள்ளிவிட முயன்றபோதும், மீண்டும் நினைவிழந்த நிலையில் தாக்குதல் தொடர்ந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.

தண்டனை பெற்ற இருவருக்கும் நீண்டகால குற்றப் பின்னணி இருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். கேரி பெக்ஃபோர்ட் ஏற்கனவே கடுமையான பாலியல் வன்புணர்வு குற்றத்திற்காக தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களது செயல்கள் மனிதாபிமானமற்றவை என்றும், அவர்களின் மன்னிப்பு கோரல்களைத் தான் ஏற்றுக்கோள்ளவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.