புகலிடக் கோரிக்கையாளர்களின் சொர்க்கபுரியாக இருந்த கனடா, தற்பொழுது 'டீடைட ஊ-12' எனும் புதிய குடிவரவுச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் அந்நாட்டின் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
'கனடாவின் குடிவரவு அமைப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்தும் சட்டம்' (ளுவசநபெவாநniபெ ஊயயெனய'ள ஐஅஅபைசயவழைn ளுலளவநஅ யனெ டீழசனநசள யுஉவ) என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படும் இந்தச் சட்டம், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
பல இலட்சம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்குக், குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு தஞ்சம் கொடுத்த கனடா நாட்டின் இச்சட்டமானது, பல்வேறுபட்ட விமர்சனங்களைப் பெறத் தொடங்கியிருக்கிறது. அகதிகள் தொடர்பான விண்ணப்பங்களை விரைவுபடுத்துதல், மோசடியான கோரிக்கைகளைக் குறைத்தல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இது இயற்றப்பட்டுள்ளது என கனடிய அரசாங்கம் விளக்கம் கூறுகின்ற போதிலும், அகதிக் கோரிக்கை விடுக்கும் உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் தலையில் பெரும் இடியாகவே இச்சட்டம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொடர் இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் தஞ்சக் கோரிக்கை பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
புதிய சட்டத்தின் கீழான முக்கிய மாற்றங்களைப் பார்ப்போமேயானால், இதன் உள்குத்தைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
1. புதிய சட்டத்தின்படி, ஒரு நபர் கனடாவுக்குள் நுழைந்து ஒரு வருட காலத்துக்குள் புகலிடம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த காலப்பகுதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தகுதியற்றவையாகக் கருதப்படலாம்.
2. பாதுகாப்பான மூன்றாவது நாடு ஒப்பந்தத்தின் விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அமெரிக்கா வழியாகக் கனடாவுக்குள் நுழைந்து எல்லையில் அகதி அந்தஸ்து கோருவது கடினமாக்கப்பட்டுள்ளது.
3. அகதிக் கோரிக்கைகளை விரைவாக மதிப்பீடு செய்வதற்காக அரசாங்கம் துரிதகதி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 'தெளிவான ஆதாரமற்றவை' எனக் கருதப்படும் விண்ணப்பங்கள் மிக விரைவாக நிராகரிக்கப்படலாம். இதன்மூலம் நீண்டகால தாமதங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வரும் விண்ணப்பங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது அவற்றை விரைவுபடுத்துவதற்கு குடிவரவு அமைச்சருக்கு இப்போது அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகலிடக் கோரிக்கை முறைமையின் மீது அரசாங்கம் கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
5. அதிக ஆபத்துள்ளவர்கள் எனக் கருதப்படும் விண்ணப்பத்தாரர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலாம் அல்லது மின்னணுக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படலாம். இந்த நடவடிக்கையானது மனித உரிமை அமைப்புகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மேற்குறிப்பிட்ட ஐந்து முக்கிய அம்சங்களும் இப்புதிய சட்டத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தகர்த்தெறிந்திருக்கின்றன. இலங்கை போன்ற நாட்டிலிருந்த புகலிடம் கோரிச் செல்பவர்களின் இலத்திரனியல் கண்காணிப்பு, அல்லது ஆவாணங்களைத் திரட்டுவதற்கான காலக்கெடு என்பன கேள்விக்குட்படுத்த வேண்டியவையாகவுள்ளன.
ஏனெனின், இலங்கையில் தற்போதைய ஆட்சியாளர்களின் கடும்போக்கு, ஈழத் தமிழரத்களின் புரம்பெயர் வாழ்வில் பெரும் இடியாகவே இறங்கும் என்பதில் மாற்றுக்கடுத்துக்கு இடமில்லை.
புதிய சட்டத்தினூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் பாதிப்புக்குள்ளாகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டத்தின் தாக்கம், பல ஈழத்தமிழர்கள் மீதும் பாயும் என்பதே ஆபத்தான விடயமாகும்.
அமெரிக்கா வழியாகக் கனடாவுக்குள் நுழையும் அகதிகள், புகலிடக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் செய்யும் தனிநபர்கள், முறையான ஆவணங்கள் அல்லது சட்ட உதவி இல்லாத விண்ணப்பதாரர்கள் போன்றோர் நேரடியாகப் பாதிப்புக்குள்ளாகுவர்.
புகலிடக் கோரிக்கையுடன் ஈழத்திலிருந்து கனடா செல்பவர்களில் பலர் அமெரிக்காவூடாகத்தான் வருகின்றனர். பூகோள வழித்தடம் அப்படித்தான் அமைந்திருக்கிறது. ஆகையால், புகலிக் கோரிக்கையுடன் கனடா வரும் ஈழத் தமிழர்கள் நிச்சயமாகப் பாதிப்புக்குள்ளாகுவர்.
புதிய சட்டத்தில் சொல்லப்பட்ட சீர்திருத்தங்கள் முறைமையின் வினைத்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று கனடா அரசாங்கம் கூறினாலும், உண்மையான அகதிகள் நியாயமான விசாரணையைப் பெறுவதை இந்தப் புதிய விதிகள் தடுக்கலாம் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
குறிப்பாக, விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், முழுமையான தீர்ப்பாய மீளாய்வுக்கான வாய்ப்பு மறுக்கப்படலாம் எனச் சில விதிகள் குறிப்பிடுகின்றன.
கனடாவின் அகதிகள் முறைமை ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான நிலுவையில் உள்ள வழக்குகளாலும், ஒப்புதல் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளாலும் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், அதிகரித்து வரும் புகலிடக் கோரிக்கைகளை நிர்வகிப்பதற்கும், தேங்கிக் கிடக்கும் விண்ணப்பங்களைக் குறைப்பதற்குமான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த புதிய சட்டம் பார்க்கப்படுகிறது.
ஆகையால், குறித்த சட்டத்தின் கிடுங்குப் பிடியைத் தளர்த்தி, உண்மையான புகலிடக் கோரிக்கையாளர்களின் நலனின் கனடிய அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்த வேண்டியது, பூகோள அரசியற்பரப்பில் கட்டாயமாகிறது.