திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணேச்சரம் ஆயல வளாகத்தில் ரேடார் அமைப்பை நிறுவும் திட்டங்கள் எதுவும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் உள்ள திருகோணேச்சேரம் ஆலய நிர்வாக சபையின் வாழ்நாள் உறுப்பினர் சி. ஜெயசங்கர், ரேடார் அமைப்பை நிறுவுவதற்காக ஆலய நிலத்தின் ஒரு பகுதியை கடற்படை கோருவதாகத் தெரியவந்துள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறித்து இலங்கை விமானப்படை ஒரு உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையும் விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
"திருகோணேச்சரம் ஆலய வளாகத்திலோ அல்லது அதைச் சுற்றியோ எந்தவொரு ரேடார் அமைப்பையும் நிறுவ இலங்கை விமானப்படைக்கு எந்தத் திட்டமும் இல்லை. மேலும், இந்த நோக்கத்திற்காக எந்த நிலத்தையும் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்," என விமானப்படையின் ஊடகப் பணிப்பாளர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படை, நாட்டின் வரலாற்று மற்றும் சமயத் தலங்களின் புனிதத்தையும் பாரம்பரியத்தையும் எப்போதும் மதித்து வந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தில் அபிவிருத்திப் பணிகளையோ அல்லது இராணுவக் கட்டமைப்புகளையோ மேற்கொள்ளும் நோக்கம் விமானப்படைக்கு இல்லை.
மேலும், எந்தவொரு உத்தியோகபூர்வ விசாரணையுமின்றி இதுபோன்ற பொய்ச் செய்திகளை வெளியிடுவது, அப்பகுதி மக்களிடையே தேவையற்ற அமைதியின்மையை ஏற்படுத்துவதோடு, விமானப்படை மீது ஒரு தவறான மனப்பான்மையையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, இந்தச் செய்தி ஒரு பொய்யான செய்தி என்பதை உங்களுக்குத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம், என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
koneshwaran Temple Correction News for Website _260505_165616