இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்குப் பொருத்தமான இராஜதந்திர ரீதியில் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் ஒன்றின் ஊடாகவே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக அண்மையில் பதவியேற்ற தளபதி விஜய், இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வரும் விடயங்களை வலியுறுத்தியுள்ளார்:
புதிய கைதுகள்: இன்று இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்ட மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் குறித்து அமைச்சரின் விசேட கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தற்போதைய நிலைமை: ஏற்கனவே 54 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படகுகள் விபரம்: இலங்கையிடம் தற்போது 264 இந்திய மீன்பிடிப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்குமாறு முதலமைச்சர் விஜய் இந்திய வெளிவிவகார அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.