பில்லியனரான முதல் பிரித்தானிய விளையாட்டு நட்சத்திரமாக டேவிட் பெக்காம் சாதனை!

பில்லியனரான முதல் பிரித்தானிய விளையாட்டு நட்சத்திரமாக டேவிட் பெக்காம் சாதனை!

சண்டே டைம்ஸ் (Sunday Times) நாளிதழின் உலகப் பணக்காரர்கள் பட்டியலின்படி, சேர் டேவிட் பெக்காம் மற்றும் அவரது மனைவி லேடி விக்டோரியா ஆகியோர் கடந்த ஓராண்டில் தங்களது சொத்து மதிப்பை இரட்டிப்பாக்கியதன் மூலம், பிரித்தானியாவின் முதலாவது பில்லியனர் விளையாட்டு வீரராக டேவிட் பெக்காம் உருவெடுத்துள்ளார்.

இந்த பிரபல தம்பதியினரின் தற்போதைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1.185 பில்லியன் பவுண்டுகள் (£) ஆகும்.

இது 2025 ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் மதிப்பிடப்பட்ட அவர்களின் 500 மில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் பாரியதொரு வளர்ச்சியாகும்.

சொத்து மதிப்பு திடீரென உயரக் காரணம்:

அமெரிக்காவில் (US) சேர் டேவிட் பெக்காம் மேற்கொண்ட முதலீடுகளே இந்த சொத்து உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

குறிப்பாக, புகழ்பெற்ற காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை 2028 ஆம் ஆண்டு வரை 'இன்டர் மியாமி' (Inter Miami) கிளப் அணிக்காக ஒப்பந்தம் செய்ததன் மூலம், அந்த கிளப்பில் பெக்காமுக்கு உள்ள பங்குகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இன்டர் மியாமி கிளப்பின் சொந்த மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள ஒரு மாபெரும் வீட்டுமனை மற்றும் சொத்து அபிவிருத்தி (property development) திட்டமும் அவர்களுக்கு எதிர்பாராத பலத்த லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

அதேவேளை, லேடி விக்டோரியாவின் சொந்தப் பெயரிலான ஃபேஷன் பிராண்டின் (fashion line) வருவாயும் முதன்முறையாக 100 மில்லியன் பவுண்டுகளைத் தாண்டியுள்ளது.

இதன் மூலம் விளையாட்டு மற்றும் வணிக உலகில் தங்களது ஆதிக்கத்தை இந்த தம்பதியினர் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.