கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இன்றை நான்காவது நாளான இன்று கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

போரதீவுப்பற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கு ரீதியாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை(15.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

அப்பகுதி பொதுமக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினர்.

குமுழமுனையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

முல்லைத்தீவு - குமுழமுனையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மூலக்கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு 15.05.2026இன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்லையா சிறீஸ்கந்தராசா தலைமையில் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டது.

இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பொதுமக்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.