இறுதிப் போரில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
இன்று காலை 06:00 - 09:30 மணி வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில்இ இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் இடம் பெறும்.
காலை 10:15 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். காலை 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும். காலை 10:30 மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்படும்.
காலை 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும். காலை 10:30 மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப் படும். ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு - கிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்,
'நாம் கட்டமைக்கப்பட்ட ஒரு இனப் படுகொலையைச் சந்தித்த மக்கள். அந்த அநீதிக்கு எதிராக எமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும், உலகிடம் நீதியைக் கோரவும் இந்த நினைவேந்தல் மிக முக்கியமானது. அரசியலைக் கடந்து தமிழ்த்தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் அணி திரண்டு எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு அனைத்துத் தமிழ மக்களையும் அன்புடன் அழைக்கின் றோம்' என்று தெரிவித்தார்.
இந்த நினைவேந்தல் பணிகளுக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிரதேச மக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்கள் நாளை ஒரே நேரத்தில் நினைவேந்தலில் ஈடுபடவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.