கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கப்பம் கோரி 11 நபர்கள் கடத்தப்பட்டு, கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உத்தியோகபூர்வமாக சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி அவரைக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் (Notice) விடுத்துள்ளனர்.
இந்த விவகாரமானது, கடந்த 2008 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்படும் தொடர்ச்சியான கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையதாகும்.