இன்று (11) காலையில் தற்காலிகமாக மூடப்பட்ட குவைத் வான்பரப்பு மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் தனது வான்பரப்பைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்தக் காரணத்தினால், குவைத்திற்கு வருகை தரவிருந்த விமானங்கள் ஏனைய விமான நிலையங்களை நோக்கித் திசைதிருப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் தனது வான்பரப்பைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக இன்று (11) வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்தக் காரணத்தினால் குவைத்திற்கு வருகை தரவிருந்த விமானங்கள் ஏனைய விமான நிலையங்களை நோக்கித் திசைதிருப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று அதிகாலை குவைத் மற்றும் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க வான்படைத் தளங்களை (US Air Bases) இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (Islamic Revolutionary Guard Corps) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.