யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (22) 31வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில், மொத்தமாக 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 390 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் மட்டும் மேலும் 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி. நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 03 என்புக்கூடுகள் ஒரே வரிசையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் 09 என்புத் தொகுதிகள் ஒழுங்கற்ற முறையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.