ஈரானிய எண்ணெயை விற்பனை செய்வதற்கு தற்காலிக அனுமதி வழங்கும் வகையில் அமெரிக்க திறைசேரி திணைக்களம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் “பொது உரிமம்” ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பொதுவாக அமுலில் இருக்கும் சில கட்டுப்பாடுகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக, ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்திற்கும், சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கும் ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, ஈரானிய எண்ணெயின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு அங்கீகாரம் வழங்கும் தற்காலிக நடவடிக்கையாக இந்த 60 நாள் பொதுஉரிமம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளுக்கு தற்காலிக விலக்கு வழங்கப்படும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.