ஹோமுஸ் நீரிணையில் பிரித்தானிய எரிபொருள் கப்பல் மீது தாக்குதல்

ஹோமுஸ் நீரிணையில் பிரித்தானிய எரிபொருள் கப்பல் மீது தாக்குதல்

ஹோமுஸ் நீரிணையூடாக (Strait of Hormuz) பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் போக்குவரத்து நப்பலொன்றின் மீது இன்று (27) அடையாளம் தெரியாத தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலினால் கப்பலுக்குச் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதிலிருந்த பணியாளர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் (UKMTO) அறிவித்துள்ளது.

இதற்குச் சில நாட்களுக்கு முன்னரும், ஹோமுஸ் நீரிணையூடாகப் பயணித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான எரிபொருள் கப்பலொன்றின் மீதும் இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிகாரிகளினால் நேற்று (26) ஈரானின் சில இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.