வெனிசுலாவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை 920 பேர் உயிரிழந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், 51,000க்கும் மேற்பட்டோரை இன்னும் காணமுடியாத நிலையில், மீட்புக் குழுவினர் அவர்களை தேடி வருவதாக அந்நாட்டு தகவல்க்ள தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை அன்று ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள், லா குவைராவைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியை பேரழிவுக்கு உள்ளாக்கின.
அங்கு போக்குவரத்து நெரிசல் தேடுதல் பணிகளுக்குத் தடையாகத் தொடங்கியதால், வெள்ளிக்கிழமை இரவு அதிகாரிகள் அப்பகுதிக்குச் செல்வதைத் தடைசெய்தனர்.
இந்நிலையில், அரசு மீட்புக் குழுக்களின் பற்றாக்குறையால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெனிசுலா மக்கள் செய்வதறியாது தவிப்பதாக கூறப்படுகின்றது.
உயிர் பிழைப்பதற்கான மிக முக்கியமான 72 மணி நேர அவகாசம் வேகமாகச் சுருங்கி வருவதாக உதவி முகமைகள் எச்சரித்துள்ளன.
லா குவைராவைச் சுற்றியுள்ள பகுதிக்குள் நுழைய விரும்புவோர் இனி அதிகாரப்பூர்வ அனுமதிகளைப் பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.