கலவர பூமியாக மாறிய இலங்கையின் தலைநகர்! 25பேரை சுட்டுக்கொன்றதா போலீஸ்? ஆயிரம் கேள்விகள்.!

கலவர பூமியாக மாறிய இலங்கையின் தலைநகர்! 25பேரை சுட்டுக்கொன்றதா போலீஸ்? ஆயிரம் கேள்விகள்.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (05) பிற்பகல் சிறைக்கைதிகளின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்து, 33 பேர் காயமடைந்திருந்தனர். இன்று அதிகாலை நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இன்று முற்பகல் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்த மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் ஐவர் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பொலிஸார், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்குவர்.