அதிகரித்து வரும் ஜெட் எரிபொருள் விலை மற்றும் அமெரிக்காவிற்கான பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதனால், ஏர் கனடா (Air Canada) நிறுவனம் இந்த இலையுதிர் காலம் முதல் அமெரிக்காவிற்கான தனது 8 விமானச் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த அல்லது தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதன்படி, றொரண்டோ (Toronto) மற்றும் மொன்றியால் (Montreal) நகரங்களில் இருந்து அமெரிக்காவின் மிட்வெஸ்ட் (Midwest) நகரங்களுக்கான மூன்று வழித்தடங்கள் இரண்டாவது குளிர்காலமாக ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல், ஒட்டாவா (Ottawa), மொன்றியால் (Montreal) மற்றும் கியூபெக் (Quebec City) நகரங்களில் இருந்து புளோரிடா (Florida) மாகாணத்திற்கான பருவகால விமானங்கள் அக்டோபருக்கு பதிலாக டிசம்பர் மாதமே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நியூயோர்க்கின் ஜே.எப்.கே (JFK) விமான நிலையத்திற்கான சேவைகளும் இந்த குளிர்காலத்தில் மீண்டும் தொடங்கப்படாது.
ஈரான் (Iran) போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்ததால், ஏர் கனடா (Air Canada), வெஸ்ட்ஜெட் (WestJet) மற்றும் ஏர் ட்ரான்ஸாட் (Air Transat) ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் சேவைகளைக் குறைத்துள்ளன.
மே 2024 முதல் கடந்த மே மாதம் வரை அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் திரும்பிய கனடியர்களின் எண்ணிக்கை 28 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும், றொரண்டோவின் பில்லி பிஷப் (Billy Bishop) மற்றும் லாகார்டியா (LaGuardia) விமான நிலையங்களுக்கு இடையேயான தினசரி சேவைகளை அதிகரிக்க ஏர் கனடா திட்டமிட்டுள்ளது.