நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த அதிகாரிகளுக்கான சிகிச்சை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில், இதுவரை கிடைக்கப்பெற்ற அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களின்படி, 23 சிறைச்சாலை அதிகாரிகள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 54 கைதிகளும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, 19 கைதிகள் மற்றும் 7 சிறைச்சாலை அதிகாரிகள் என மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.