ராஜபக்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தியள்ள சந்திரிக்கா !

ராஜபக்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தியள்ள சந்திரிக்கா !

ராஜபக்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தியள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ..

பெரும் திட்டங்கள், வெளிநாட்டு கடன்கள் தொடர்பான பெரும் ஊழல்களை குற்றசாட்டுக்களை சந்திரிகா முன் வைத்துள்ளார் .

2006 முதல் 2014 இறுதி வரையான அக்காலப்பகுதியில் ஒரே குடும்பத்தை 4 சகோதரர்கள் அவர்களின் நான்கு மகன்கள் , ஒருவரின் மைத்துனர் ஆகியோர் முக்கிய அரச அபிவிருத்தி திட்டங்கள் மூலம் , இந்த ராஜபக்ச குடும்பத்தினர் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்துள்ளதாக சந்திரிகா குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாட்டு கடன்களை அதிக வட்டி விகிதத்தில் (6% – 9%) வரை பெற்று, அதில் கமிஷன் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது ஆட்சி காலத்தில் வெளிநாட்டு கடன்கள் LIBOR வீததை விட சுமார் 1 வீத அதிக வட்டி மட்டுமே பெறப்பட்டன .

அனால் ராஜபகஷ ஆட்சியில் 6 வீதம் முதல் 9 வீதம் வரை உயர்ந்த வட்டி வீதத்தில் கடன்கள் பெறப்பட்டிருக்கின்றன . அந்த உயர்ந்த வட்டியில் 2 முதல் 3 வீதம் வரையான கமிஷன் அல்லது சட்ட விரோத இலாபம் இவர்களின் பொ கட்களுக்கு சென்றதாக வும் குற்றம் சாட்டி உள்ளார்

நுரைச்சோலை அனல் மின் நிலையம் மற்றும் பல்வேறு சாலை அபிவிருத்தித் திட்டங்களில் திட்ட மதிப்பை விட பல மடங்கு அதிக செலவீனம் காட்டப்பட்டு ஊழல் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் சீன நிறுவனம் ஒன்றுடன் 280 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நுரை சோலை அனல் மின் நிலையத்தின் திட்டத்தை முன் எடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செல்லைய்யப்பட்டிந்தன. ஆனால்

ஆட்சி மாற்றத்தித்திற்கு பிறகு அதாவது மஹிந்தவின் ஆட்சியில் , திட்ட மதிப்பில் 50 வீதம் அதாவது 140 மில்லியன் டொலர் கமிஷன் கோரறப்பட்டதால் அந்த நிறுவனம் திட்டத்தில் இருந்து விலக்கியதாகவும் சுட்டி சாட்டியுள்ளார் .

அத ன் பின் அனுபவம் குறைந்த வேறு ஒரு சீன நிறுவனத்திடம் அதே திட்டம் 510 மில்லியன் டாலர் செலவில் ஒப்படைக்கப்பட்டது

இதே போன்றுதான் நெலும் போக்கான , கொழும்பு கட்டு நாயக்க அதி வேக நெடுஞ் சாலை உள்ளிட்ட மேலும் 6 பெரும் திட்டங்களிக்கும் செலவுகள் அசாதாரணமாக அதிகரிக்கப்பட்டது .

அமெரிக்காவில் ஒரு சாலையை அமைப்பதட்கு ஏற்படும் செலவை விட இலங்கையில் 9 மடங்கு செலவு மஹிந்தவின் காலத்தில் செலவிடப்பட்டுள்ளது

இதனாலேயே மஹிந்தவின் காலத்தில் அதிக வேக வீதிகள் அதிகம் அமைக்கப்பட்டன . இதனால் இவர்கள் அதிகளவான கொள்ளைகளை அடித்துள்ளனர்

உள்ளோராட்சி மன்றங்களில் 1 இலட்சத்தில் செய்ய கூடிய பணிக்கு 3 அல்லது 4 இலட்சம் ஒதுக்க பட்டு ஊழல் அடிமட்டம் வரை பரவியதாகவும் குற்றம் சாட்டி உள்ளார் .

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடையவர்களின் கீழ் சென்ற பின், பெரும் நட்டத்தைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

தான் ஆட்சியை மஹிந்தவிடம் ஒப்படைத்த காலத்தில் கட்டு நாயக்க விமான நிலையம் தாக்குதல் நடந்த ஆண்டை தவிர, 10 ஆண்டுகளாக தொடர்ந்து இலாபம் ஈட்டி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்னர் ராஜ்பகஷா குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவரின் நிர் வாகத்துள் சென்றதன் பின்னர் 4 ஆண்டுகளுக்குள் சுமார் 9 பில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

ஊழல் வாதிகளை கைது செய்து , பல விடயங்களை முன்னெடுத்து வரும் அனுரா அரசாங்கத்திற் கு

பொருளாதார ரீதியாக

பல யோசனைகளையும் சொல்லியுள்ளார் ..

அரச கொள்முதல்களில் கடுமையான டெண்டர் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு எழும் அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் பதவியிலிருந்து விலக வேண்டும்.

காவல்துறை மற்றும் நீதித்துறை அரசியல் தலையீடு இன்றி சுயாதீனமாகச் செயல்பட வேண்டும்.

நாட்டின் நிர்வாக அமைப்பில் முறையான மாற்றங்களை (System Change) கொண்டுவர வேண்டும் எனவும் தன்னுடைய காணொளியில் குறிப்பிட்டுள்ளார்