கியூபெக் தமிழர் பெருவிழாவிற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

கியூபெக் தமிழர் பெருவிழாவிற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

மொன்றியல்: கியூபெக்கில் வாழும் தமிழ் மக்களுக்காக ஆண்டுதோறும் நடைபெறும் "Quebec Tamil Fest & Mega Blast 2026" நிகழ்விற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. மொன்றியலில் நடைபெறும் மிகப்பெரிய வெளிப்புற தமிழ் விழாவாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, விளையாட்டு, இசை, சுவையான உணவு மற்றும் குடும்ப பொழுதுபோக்குகளை ஒரே இடத்தில் வழங்கவுள்ளது.

இந்த பிரம்மாண்ட விழா 2026 ஜூலை 11, சனிக்கிழமை, லாவாலில் அமைந்துள்ள Parc St-Maxime பூங்காவில் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை நடைபெறுகிறது.

நிகழ்வில் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள், வாலிபால் போட்டி, சிறுவர்கள் முதல் மூத்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கக்கூடிய விளையாட்டுகள் மற்றும் வெற்றியாளர்களுக்கான பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மேலும், குழந்தைகளுக்கான சுவாரஸ்யமான சவாரிகள், முக அலங்காரம் (Face Painting), சதுரங்கப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை சுவைக்க சிறப்பு தமிழ் உணவுக் கண்காட்சி (Tamil Food Court) அமைக்கப்பட்டுள்ளதுடன், நேரடி தமிழ் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளன.

நிகழ்வில் பங்கேற்பதற்கு அனுமதி மற்றும் வாகன நிறுத்தம் முற்றிலும் இலவசம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, தங்களது வணிகம், சேவைகள் அல்லது தயாரிப்புகளை ஆயிரக்கணக்கான பார்வையாளர்களிடம் அறிமுகப்படுத்த விரும்பும் தொழில்முனைவோருக்காக விற்பனையாளர் (Vendor) இடங்களும் தற்போது கிடைக்கின்றன.

மேலும் தகவல்கள் மற்றும் விற்பனையாளர் பதிவு தொடர்பாக (514) 862-0404 அல்லது +1 (514) 449-1010 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். மின்னஞ்சல்: info@newstarclub.ca. நிகழ்வின் சமீபத்திய தகவல்களை சமூக ஊடகங்கள் மற்றும் newstarclub.ca இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.