டொராண்டோ: கனடா தமிழ்நாடு கலாச்சார சங்கம் (Tamil Nadu Cultural Society of Canada – TNCSC) தனது கோடைக்கால சுற்றுலா விழா (TNCSC Summer Picnic 2026)-வை குடும்பங்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைத்துள்ளது.
இந்த சிறப்பு நிகழ்வு 2026 ஜூலை 11, சனிக்கிழமை, காலை 10.00 மணி முதல், E.T. Seton Park – Area 4, 73 Thorncliffe Park Drive, East York, Ontario என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
குடும்பத்தினர் அனைவரும் இணைந்து மகிழக்கூடிய வகையில் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திறமைக் காட்சி (Talent Show), இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், தர்பூசணி விருந்து, சிக்கன் பிரியாணி, சிற்றுண்டி, சைவ மற்றும் அசைவ மதிய உணவு, மோர், காபி உள்ளிட்ட உணவு ஏற்பாடுகளுடன், வாலிபால், கிரிக்கெட், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேயர்ஸ், ஓட்டப்பந்தயம், சாக்குப் பை ஓட்டம், புதையல் வேட்டை (Treasure Hunt) உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
நுழைவுக் கட்டணம்:
உறுப்பினர்கள் (வயது வந்தோர்): $25
உறுப்பினரல்லாதோர்: $30
6 முதல் 12 வயது குழந்தைகள்: $17
2 முதல் 5 வயது குழந்தைகள்: $7
2 வயதிற்குட்பட்ட குழந்தைகள்: இலவசம்
நிகழ்விற்கு வருபவர்கள் தங்களுக்கான நாற்காலிகளை கொண்டு வருமாறும், செல்லப்பிராணிகளுக்கு அனுமதி இல்லை என்றும், மதுபானங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்கேற்க விரும்புவோர் www.tncsc.com/events இணையதளம் மூலம் அல்லது நிகழ்வு விளம்பரத்தில் வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.
மேலும் தகவல்களுக்கு 416-273-4437, 416-991-2528 அல்லது 647-293-6814 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
கோடைக்காலத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இனிதே கொண்டாடும் இந்த விழாவில் தமிழ் சமூகத்தினர் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கனடா தமிழ்நாடு கலாச்சார சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.