மார்கம்: கனடிய தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress) நடத்தும் தமிழ் விழா 2026 (Tamil Fest 2026) நிகழ்விற்காக தன்னார்வலர்கள் (Volunteers) பதிவு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெருந்திரளான தமிழ் மக்களை ஒன்றிணைத்து தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், உணவு, இசை, கலைநிகழ்ச்சிகள், வரலாறு மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடும் இந்த பிரம்மாண்ட விழா, 2026 ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மார்கம் நகரின் Birchmount Road பகுதியில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த விழா, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் பங்களிப்பால் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களுக்கு வழிகாட்டுதல், நிகழ்ச்சி ஏற்பாடுகள், மேடை மற்றும் செயல்பாடுகளுக்கான உதவி, நிகழ்வு சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்த வாய்ப்பின் மூலம் பங்கேற்பவர்கள்:
தன்னார்வப் பணியனுபவத்தைப் பெறலாம்.
சமூக சேவை மணிநேரங்களை (Volunteer Hours) பெற்றுக்கொள்ளலாம்.
புதிய நண்பர்களை அறிமுகப்படுத்திக்கொள்ளலாம்.
சமூகத்திற்கு சேவை செய்யும் அரிய வாய்ப்பைப் பெறலாம்.
குறிப்பாக, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (High School Students) தேவையான Volunteer Hours வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாக பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.
ஆர்வமுள்ளவர்கள் https://www.tamilfest.ca/volunteers என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யலாம். விண்ணப்பித்தவர்களை பின்னர் ஏற்பாட்டாளர்கள் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை வழங்குவார்கள்.
மேலும் தகவல்களுக்கு 416-240-0078 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது info@canadiantamilcongress.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.