"பண்டார வன்னியன்" சரித்திர நாடகத்துடன்,மேலும் பல கலை நிகழ்ச்சிகள்!

"பண்டார வன்னியன்" சரித்திர நாடகத்துடன்,மேலும் பல கலை நிகழ்ச்சிகள்!

டொராண்டோ: ஹார்மனி ஹால்ஸ் (Harmony Halls) மற்றும் SRCHC முதியோர் அமைப்பு இணைந்து நடத்தும் 25ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் 20ஆவது ஆண்டு வசந்த விழா எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 20, வியாழக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு Fairview Library Theatre, 35 Fairview Mall Drive, Toronto, ON M2J 4S4 என்ற முகவரியில் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறுகிறது.

விழாவில் நாடகம், நாட்டியம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அதோடு, முதியோர் உறுப்பினர்கள் வழங்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவரவுள்ளன.

இந்த நிகழ்வில் தமிழ் சமூகத்தினரும், குடும்பத்தினரும் கலந்து கொண்டு கலை, கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு திருமதி ஊர்மிளா (Urmila) அவர்களை (416) 752-0101, Ext. 4230 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.