தமிழ்ச் சமூக மையத்தினர் நகர முதல்வர் ஒலிவியா சோ (Olivia Chow) அவர்களை சந்தித்தனர்

தமிழ்ச் சமூக மையத்தினர்  நகர முதல்வர் ஒலிவியா சோ (Olivia Chow) அவர்களை சந்தித்தனர்

தமிழ்ச் சமூக மையத்தினர் இன்று Toronto நகர முதல்வர் ஒலிவியா சோ (Olivia Chow) அவர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்ச் சமூக மையத்தை உருவாக்குவதற்கான எமது திட்டங்களையும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் நகர முதல்வருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தமிழ்ச் சமூக மையத்திற்கான உத்தியோகபூர்வமான திட்ட வரைவு (Official Plan ) மற்றும் பயன்பாட்டு மாற்றத்திற்கான சட்டத் திருத்தம் (Zoning By-law Amendment) குறித்த கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நகர முதல்வருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

அடுத்த வருடம் நிர்மாணப் பணிகளைத் ஆரம்பிப்பதை பிரதான நோக்கமாக கொண்ட எமது நகர்வுகளுக்கு நகர சபையின் முழுமையான ஓத்துழைப்பினை வழங்குவதாக நகர முதல்வர் உறுதியளித்தார்.

தமிழ் மக்களின் நீண்டகால கனவை நனவாக்கும் இந்த முயற்சியில் அடுத்த நிலை நோக்கி நாம் நகரத் தொடங்கும் இந்த சந்தர்ப்பத்தில் இதனை சாத்தியமாக்குவதற்கு உறுதியான பங்களிப்பினை வழங்கி வரும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி.