Ekuruvi Steps 2026 – Grand Finale Walk A Thone நிகழ்விற்கு தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் நேரில் அழைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 7 ஆண்டுகளாக, Ekuruvi Steps ஆயிரக்கணக்கான மக்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி ஊக்குவித்து வருகிறது. இந்த ஆண்டு, பங்கேற்பாளர்கள் தொடர்ந்து 60 நாட்கள் தினமும் 10,000 அடிகள் நடக்கும் சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்து, தங்களது உறுதி, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளனர்.
அவர்களின் இந்தச் சிறப்பான சாதனையை ஒன்றிணைந்து கொண்டாடும் இந்நிகழ்வில் தங்களின் வருகை எங்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
நிகழ்வு விவரங்கள்
திகதி: வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2026
6:30 PM – 7:00 PM: சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
7:00 PM – 8:00 PM: Grand Walk A Thone
இடம்: Boxgrove Community Park
346 Box Grove By-pass, Markham
வாருங்கள்...
சாதனையாளர்களை பாராட்டுவோம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்போம்.
மீளெழுந்த பெண்கள் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்போம்.
Ekuruvi Steps-இன் வெற்றிகரமான 7வது ஆண்டை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.
இந்த சிறப்பான தருணத்தில் தாங்களும் உங்கள் குடும்பத்தினரும் கலந்துகொண்டு எங்களை மகிழ்விப்பீர்கள் என மனமார நம்புகிறேன்.
நன்றி. தங்களை நேரில் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
நவஜீவன் ஆனந்தராஜ்
நிறுவனர் – புதிய வெளிச்சம்
ஏற்பாட்டாளர் – Ekuruvi Steps 2026