கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய கொடியேற்றத் திருவிழா: ஜூலை 12 முதல் கோலாகலத் தொடக்கம்!

கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய கொடியேற்றத் திருவிழா: ஜூலை 12 முதல் கோலாகலத் தொடக்கம்!

ஸ்கார்பாரோ (கனடா): கனடா, ஸ்கார்பாரோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தின் வருடாந்திர கொடியேற்றத் திருவிழா மற்றும் முக்கிய வழிபாட்டு நிகழ்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு (விஞ்ஞானாபனம்) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான திருவிழா நிகழ்வுகள் வரும் ஜூலை 12, 2026 அன்று கொடியேற்றத்துடன் மிக விமரிசையாகத் தொடங்கவுள்ளன.

முக்கிய திருவிழா நாட்களின் விபரம்:

கொடியேற்றம்: ஜூலை 12, 2026 — ஞாயிற்றுக்கிழமை

தேர் திருவிழா: ஜூலை 25, 2026 — சனிக்கிழமை

தீர்த்தம் (ஆராட்டு): ஜூலை 26, 2026 — ஞாயிற்றுக்கிழமை

ஆலய முகவரி மற்றும் தொடர்பு விபரங்கள்:

ஆலயம்: கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் (Canada Sri Ayyappan Hindu Temple)

முகவரி: 635 Middlefield Road, Scarborough, ON, M1V 5B8

தொலைபேசி எண்: 416 321 6104

இணையதளம்: www.ayyappan.ca

ஆலய நிர்வாகத்தின் அழைப்பு: "இந்தத் திருவிழா நிகழ்வுகள் அனைத்திலும் பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து, கலந்துகொண்டு, கலியுக வரதனான ஸ்ரீ ஐயப்பனின் பேரருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்."