உலகத் தமிழர்களை தாயகத்தில் முதலீடு செய்ய அழைத்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்

உலகத் தமிழர்களை தாயகத்தில் முதலீடு செய்ய அழைத்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்

சென்னை: தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாடு மற்றும் ஒற்றைச் சாளர (Single Window) முதலீட்டு வசதிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரப்பூர்வ அமைப்பான Guidance Tamil Nadu, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து Guidance Tamil Nadu வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவர்கள் உலகத் தமிழர்களுக்காக எழுதியுள்ள சிறப்பு கடிதம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களின் தாயகமான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுத்து முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், முதலமைச்சரின் இந்த தொலைநோக்கு பார்வையை நடைமுறையில் செயல்படுத்தும் பணியில் Guidance Tamil Nadu முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குதல் அல்லது முதலீட்டு வாய்ப்புகளை ஆராய விரும்பும் வெளிநாட்டு தமிழர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் தனிப்பட்ட வழிகாட்டுதலும், ஒற்றைச் சாளர சேவையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், அரசின் சலுகைகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அறிந்துகொள்ள விரும்புவோர் Investing in Tamil Nadu இணையதளத்தைப் பார்வையிடலாம். மேலும், மின்னஞ்சல் அல்லது கட்டணமில்லா உதவி எண்ணின் மூலம் Guidance Tamil Nadu-வை தொடர்புகொண்டு முதலீட்டு ஆலோசனைகளைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகத் தமிழர்களின் முதலீடுகள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கையையும் Guidance Tamil Nadu வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது