சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பாணை

சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பாணை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் எழுத்து மூலமான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றின் ஒரு பகுதியாக வாக்குமூலம் பதிவு செய்யும் நோக்கில், இந்த மாதம் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட நேர்காணல் குழுவில் சஜித் பிரேமதாச உறுப்பினராக செயல்பட்டிருந்தார்.

அந்த நியமன நடைமுறை தொடர்பாக விளக்கங்களைப் பெறுவதற்கும், மேலதிக தகவல்களைச் சேகரிப்பதற்குமான விசாரணையின் ஒரு பகுதியாகவே அவருக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமிந்த குலரத்னவின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.