சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 35-வது பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு அமைச்சர் சகோதரர் திரு. மரிய வில்சன் அவர்களோடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றோம்.
‘மாணவர்களே சமூகத்தின் புதிய சிந்தனைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் காரணமாக இருக்கிறார்கள். சமத்துவம், அனைவருக்குமான சம உரிமைகள், பாரபட்சமற்ற வளர்ச்சி, ‘எல்லோருக்கும் எல்லாமுமான எதிர்காலம்’ ஆகிய இலட்சியப் பார்வைகளோடு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் மாணவர்கள்.
தமிழ்நாடு அரசு இளைஞர் முன்னேற்றம், புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் முனைவோர் திறன், பொருளாதார முன்னேற்றம் ஆகிய அனைத்திலும் தமிழ்நாடு உலக அரங்கில் சிறந்து விளங்கும் நம்பிக்கையான வருங்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது’ என்று கூறிக்கொண்டு, பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டோம்.