Bootstrap

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னால் உள்ள இரண்டு தெரிவுகள்!

எம்.எல்.எம்.மன்சூர்

கூர­கல தொல்­லியல் அமை­விடம் தொடர்­பாக 2016 இல் கொழும்பில் நடத்­தப்­பட்ட ஊடக மாநா­டொன்றில் இஸ்லாம் மதத்தை இழி­வு­ப­டுத்தும் விதத்தில் கருத்­துக்­களை தெரி­வித்­த­மைக்­காக அண்­மையில் கொழும்பு மேல் நீதி­மன்றம் பொது­பல சேனா இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது. அத்­துடன் அவ­ருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

அந்த ஊடக மாநாட்­டை­ய­டுத்து இரு முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் முன்­வைத்த முறைப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் இவ் ­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்த நீதி­மன்றத் தீர்ப்பு இலங்­கையில் சட்­டத்தின் ஆட்­சிக்கு கிடைத்த ஒரு முக்­கி­ய­மான வெற்­றி­யாக நோக்­கப்­ப­டு­கி­றது. மேலும், தேர்­தல்கள் அண்­மித்து வரும் நிர்­ண­ய­க­ர­மான ஒரு கால கட்­டத்தில் இன வெறி­யையும், மத வெறி­யையும் தூண்டும் விதத்தில் பேச முற்­படும் நபர்­க­ளுக்கும் இத்­தீர்ப்பின் மூலம் ஒரு ‘கடு­மை­யான செய்தி’ அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஞான­சார தேர­ரையும் உள்­ளிட்ட தீவிர சிங்­கள – பௌத்த தேசி­ய­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பொது வெளியில் தொடர்ந்து அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்டு வந்­தி­ருக்கும் சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் இத்­தீர்ப்பு பெரு­ம­ள­வுக்கு ஆறுதல் தரும் ஒரு விடயம் என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஞான­சார தேரர் சுமார் பத்­தாண்டு காலம் நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் அர­சியல் யாப்பில் அனைத்துப் பிரி­வி­ன­ருக்கும் உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் மத வழி­பாட்டுச் சுதந்­திரம் என்­ப­வற்றை துளியும் பொருட்­ப­டுத்­தாமல் மேற்­கொண்டு வந்த ஒரு நீண்ட, கட்­டற்ற பயணம் தர்க்க ரீதியில் எவ்­வாறு முடி­வுக்கு கொண்டு வரப்­பட வேண்­டுமோ அவ்­வாறு முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. அதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை.

அவர் தனது புகழின் உச்­சத்தில் எவரும் தன்­மீது கை வைக்க முடி­யாது என்ற அசை­யாத நம்­பிக்­கையில் உத்­தி­யோகப் பற்­றற்ற ஓர் அதி­கார மைய­மாக செயல்­பட்டு வந்­த­போது 2016 இல் மதச் சிறு­பான்மை சமூ­க­மொன்றை இலக்கு வைத்து தெரி­வித்த வன்­மத்­துடன் கூடிய ஒரு சில கருத்­துக்கள் இப்­பொ­ழுது அவரை சிறைக்கு அனுப்பி வைத்­தி­ருக்­கின்­றன. ஆனால், அவ­ரு­டைய அத்­த­கைய அடா­வடிச் செயல்­க­ளுக்கு தொடர்ந்து உற்­சா­க­மூட்டி, அவ­ருக்கு ‘சங்க ரஜு’ (பிக்­கு­களின் அரசர்) எனப் பட்­ட­ம­ளித்து, அவரை கொண்­டா­டிய பல இலட்­சக்­க­ணக்­கான ஆத­ர­வா­ளர்­களின் கர­கோ­ஷங்­களோ அல்­லது விசில் ஒலி­களோ இல்­லாமல் அவர் மட்டும் தனி­யாக சிறைக்குச் செல்ல நேரிட்­டி­ருப்­பது பெரும் துயரம்.

தீர்ப்பு அறி­விக்­கப்­பட்ட பின்னர் அவர் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வெளியில் வந்த சந்­தர்ப்­பத்­திலும், பின்னர் சிறைக்கு எடுத்துச் செல்­லப்­பட்ட சந்­தர்ப்­பத்­திலும் வழ­மை­யாக அவ­ருக்­கென திரளும் பெருந்­தொ­கை­யான ஆத­ர­வா­ளர்கள் எவரும் அங்­கி­ருக்­க­வில்லை. அண்மைக் கால­மாக சிங்­கள – பௌத்த சமூ­கத்தில் ஏற்­பட்டு வந்­தி­ருக்கும் ஒரு சில முக்­கி­ய­மான மாற்­றங்­களின் பிர­தி­ப­லிப்பு அது.

இந்தத் தீர்ப்­புக்கு எதி­ராக தேரரின் சார்பில் மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. எப்­படிப் போனாலும், எதிர்­கால ஜனா­தி­பதி ஒருவர் அவ­ருக்கு பொது மன்­னிப்பு வழங்கி, அவரை சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்­வ­தற்­கான வாய்ப்பு இருந்து வர­வில்லை என எவரும் அறு­தி­யிட்டுக் கூற முடி­யாது. பல­வீ­ன­மான ஒரு அரச தலைவர் அழுத்­தங்­களை எதிர்­கொள்ளும் பொழுது அவ்­வாறு செய்ய முடியும். முன்னர் நீதி­மன்ற அவ­தூறு குற்­றச்­சாட்டின் பேரில் தொட­ரப்­பட்­டி­ருந்த ஒரு வழக்கில் ஞான­சார தேர­ருக்கு ஆறு வருட கால சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 2019 மே மாதம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குப் போய் அவரை சந்­தித்து உரை­யா­டி­யதும், அச்­சந்­திப்பின் மூன்று தினங்­களின் பின்னர் அவ­ருக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டதும் பல­ருக்கு நினை­வி­ருக்­கலாம்.

எதிர்­பார்த்­த­வாறே முஸ்­லிம்கள் தரப்பில் இந்தத் தீர்ப்பு பெரு­ம­ள­வுக்கு வர­வேற்­கப்­பட்­டி­ருப்­ப­துடன், தாம­த­மா­க­வேனும் அவர் இவ்­விதம் நீதி­மன்­றத்தின் மூலம் தண்­டிக்­கப்­பட்­டி­ருப்­பது, சட்ட அமு­லாக்கல் அமைப்­புக்கள் குறித்த ஒரு நம்­பிக்­கையை எடுத்து வந்­தி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களின் தரப்பில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த பெரும்­பா­லான சமூக ஊடக எதிர்­வி­னை­களும் ‘இவ­ருக்கு இது கிடைக்க வேண்­டி­யது தான்’ என்ற தொனி­யி­லேயே அமைந்­தி­ருந்­தன.

ஆனால், வெறு­மனே உணர்ச்­சி­வ­சப்­ப­டாமல், இன்­றைய நாட்டு நிலை­மையை துல்­லி­ய­மாக கவ­னத்தில் எடுத்து, நிதான புத்­தி­யு­டனும், தூர நோக்­கு­டனும் இவ்­வி­ட­யத்தை அணுக வேண்­டி­யி­ருக்­கி­றது. அந்த அடிப்­ப­டை­யி­லேயே அது தொடர்­பான முஸ்­லிம்­களின் எதிர்­வி­னையும் அமைய வேண்டும். இங்கு மிக முக்­கி­ய­மாக கவ­னத்தில் எடுக்க வேண்­டிய விடயம் இக்­குற்றம் இழைக்­கப்­பட்ட போது நாட்டில் நில­விய சமூக, அர­சியல் பின்­புலம் (2016) மற்றும் தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்கும் இன்­றைய கால கட்­டத்தில் (2024) நிலவி வரும் சமூக, அர­சியல் பின்­புலம்.

இத்­தீர்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்னர் ஞான­சார தேரர் நீதி­மன்­றத்தில் ஆஜ­ராகி, இஸ்லாம் மதத்­திற்கு அவ­தூறு விளை­விக்கும் விதத்­தி­லான தனது வார்த்தைப் பிர­யோ­கங்கள் தொடர்­பாக இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திடம் பகி­ரங்­க­மாக மன்­னிப்புக் கோரி­யி­ருந்தார் என்­ப­தையும், தான் அவ்­விதம் வெளி­யிட்ட வார்த்­தைகள் மூலம் முஸ்­லிம்­களின் உள்­ளங்­களை புண்­ப­டுத்­தி­ய­மைக்­காக தனது ஆழ்ந்த வருத்­தத்தை தெரி­வித்­தி­ருந்தார் என்­ப­தையும் இங்கு நினைவு கூர வேண்டும்.

‘என்னை எவரும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது; நாட்டின் சட்­டங்­களும் என்னை ஒன்றும் செய்ய முடி­யாது’ என்ற மம­தையில் இலங்கை சமூ­கத்தில் அவர் தனக்­கென உரு­வாக்கிக் கொண்­டி­ருந்த இராட்­சத பிம்பம் வெடித்துச் சித­றிய ஒரு தரு­ண­மா­கவே முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­வ­தற்கு அவர் நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட அத்­த­ரு­ணத்தை நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

“செயற்­கை­யாக ஊதிப் பெருப்­பிக்­கப்­பட்ட ஒரு பலூனை (Bubble) பின்­தொ­டர்ந்து சென்ற ஞான­சார தேரர் இப்­பொ­ழுது இந்த இடத்தில் வந்து நின்­றி­ருக்­கின்றார்” என்­கிறார் அர­சியல் ஆய்­வாளர் ஜோர்ஜ் சமுவேல்.

அடுத்­த­தாக அவ­ருக்கு தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருக்கும் இன்­றைய வர­லாற்றுத் தரு­ணத்­தையும் நாங்கள் கணக்கில் எடுக்க வேண்டும். பொது­பல சேனா இயக்­கத்­தையும் உள்­ளிட்ட விதத்தில் ராவண பலய, சிங்­ஹல ராவய மற்றும் மஹசென் பல­காய போன்ற தீவிர தேசி­ய­வாத அமைப்­புக்கள் இப்­பொ­ழுது சிங்­கள சமூ­கத்­துக்குள் ஒரு கடு­மை­யான பின்­ன­டைவைச் சந்­தித்­தி­ருக்­கின்­றன. ஞான­சார தேரர் போன்ற தீவி­ர­வாத புத்த பிக்­கு­களின் குரல்கள் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக பெரு­ம­ள­வுக்கு வலு­வி­ழந்து போயி­ருந்­த­தையும், முன்­னரைப் போல அச்­ச­மற்ற விதத்­தில் வெறுப்புப் பேச்­சுக்­களை நிகழ்த்தி சிங்­கள பௌத்த மக்­களின் உணர்­வு­களை தூண்­டு­வ­தற்கு உசி­த­மான ஒரு சூழல் இப்­பொ­ழுது நாட்டில் நிலவி வர­வில்லை என்­ப­தையும் அவர்கள் நன்கு புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

சரி­யாக சொல்லப் போனால், அற­க­ல­யவின் பின்னர் சிங்­கள சமூக ஊட­கங்கள் நிகழ்த்திக் காட்­டி­யி­ருக்கும் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய ஒரு சாதனை இது. ‘V8 வாக­னங்­களில் வந்­தி­றங்கி, இன மத உணர்­வு­களைத் தூண்டி, உங்­களை உசுப்­பேற்ற முயலும் துற­விகள் குறித்து எச்­ச­ரிக்­கை­யாக இருங்கள்’ என்ற வலு­வான செய்­தியை இச்­ச­மூக ஊட­கங்கள் இடை­ய­றாது பரப்பி வரு­கின்­றன. ஒரு விதத்தில், அத்­தாக்­கு­தல்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாத நிலை­யி­லேயே இலங்கை இஸ்­லா­மிய வெறுப்பின் முதன்மைக் குரல்­க­ளாக இருந்து வந்­தி­ருக்கும் ஞான­சார தேரர் மற்றும் அத்­து­ர­லிய ரத்­தன தேரர் போன்­ற­வர்கள் இப்­பொ­ழுது ஒதுங்கி, மௌனித்­தி­ருக்­கி­றார்கள்.

இந்தப் பின்­ன­ணியில், ஞான­சார தேரர் ஒரு சுதந்­திர நப­ராக வெளி உலகில் உல­வி­னாலும் கூட, நாட்டில் இன மத ஒற்­று­மையை சீர்­கு­லைத்து, முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் பதற்ற உணர்­வு­களை தோற்­று­விக்கும் விட­யத்தில் இனிமேல் அவரால் பெரி­தாக ஒன்றும் செய்ய முடி­யாது என்­பதே இன்­றைய யதார்த்தம். ஒரு விதத்தில், வெளியில் இருக்கும் ஞான­சார தேரரை விட, ‘உள்ளே இருக்கும்’ ஞான­சார தேரர் ஆபத்­தா­ன­வ­ராக இருந்து வரக் கூடிய வாய்ப்பும் காணப்­ப­டு­கி­றது.

ஞான­சார தேரரின் செயல்­பா­டு­களால் மிகவும் மோச­மான நெருக்­க­டி­களை எதிர்­கொண்டு வந்த ஒரு சமூகம் என்ற முறை­யிலும், அவர் தலைமை தாங்­கிய இயக்­கத்தின் ஆசீர்­வா­தத்­து­டனும், அனு­ச­ர­ணை­யு­டனும் அளுத்­க­மை­யிலும் (ஜூன் 2014), திக­ன­விலும் (மார்ச் 2018) கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களால் கடும் பாதிப்­பு­களை எதிர்­கொண்ட ஒரு சமூகம் என்ற முறை­யிலும் இந்த முக்­கி­ய­மான தரு­ணத்தில் – அதா­வது கடந்த பத்­தாண்­டு­களில் முதல் தட­வை­யாக முஸ்­லிம்கள் மீது இழைக்­கப்­பட்ட ஒரு குற்­றச்­செயல் தொடர்­பாக இலங்கை நீதி­மன்றம் ஒன்று அவ­ருக்கு சிறைத் தண்­டனை வழங்­கி­யி­ருக்கும் இத்­த­ரு­ணத்தில் -அத்­தீர்ப்பை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது தொடர்­பாக இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு இரு தெரி­வுகள் இருந்து வரு­கின்­றன.

முத­லா­வது தெரிவு:

– ‘இந்தத் தண்­டனை அவ­ருக்கு வேண்டும் ; நீதி­மன்றம் வழங்­கி­யி­ருக்கும் நான்கு வருட கால சிறைத் தண்­ட­னையை அவர் அனு­ப­விக்­கட்டும். இனிமேல் அவரோ அல்­லது வேறு எவ­ரேனும் நபர்­களோ அவ்­வா­றான செயல்­களில் ஈடு­ப­டு­வதை அது நிச்­ச­ய­மாக தடுக்க முடியும்’ என்ற அணு­கு­மு­றை­யின் அடிப்­ப­டையில் நோக்கி, அதனைக் கண்டு கொள்­ளாமல் இருப்­பது.

இரண்­டா­வது தெரிவு:

இத்­தீர்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்னர் ஞான­சார தேரர் நீதி­மன்­றத்தில் ஆஜ­ராகி முஸ்­லிம்­க­ளிடம் பகி­ரங்­க­மாக மன்­னிப்புக் கோரி, முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்த நேரிட்­ட­மைக்கு ஆழ்ந்த வருத்­தத்தை தெரி­வித்­தி­ருந்­த­மையை கருத்தில் கொண்டும்,

– தயாள குணம், பெருந்­தன்மை மற்றும் மன்­னிப்பு போன்ற உய­ரிய மனித விழு­மி­யங்­களை மீண்டும் மீண்டும் வலி­யு­றுத்திக் கூறும் ஒரு புனித மாதத்தில் நாங்கள் இருந்து வரு­கின்றோம் என்ற விட­யத்தை கவ­னத்தில் எடுத்தும்,

அண்மைக் கால­மாக இலங்கை பொதுச் சமூ­கத்தில் இன மத நல்­லு­ற­வுகள் மற்றும் சமூக நல்­லி­ணக்கம் என்­பன தொடர்­பாக வெளிப்­ப­டை­யாக தென்­படும் ஒரு சில வர­வேற்­கத்­தக்க மாற்­றங்­களை கருத்தில் கொண்டும்,

இலங்­கையில் பொது­வாக இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் அடிக்­கடி மேற்கோள் காட்­டப்­பட்டு வரும் (ஞான­சார தேரர் பின்­பற்றத் தவ­றிய) ‘வன்­மத்­தினால் ஒரு போதும் வன்­மத்தை ஒழித்து விட முடி­யாது’ (வைரயென் வைரய நொசன்­சிந்தே) என்ற புத்த போத­னைக்கு மதிப்­ப­ளிக்கும் விதத்­திலும்,

இறு­தி­யாக ஆனால் மிக முக்­கி­ய­மாக (இலங்­கையில் ஞான­சார தேரர் வகித்து வந்­தி­ருக்கும் வகி­பா­கத்­துக்கு இணை­யான விதத்தில்) பல ஐரோப்­பிய நாடு­களில் முனைப்­பாக செயற்­பட்டு வந்த தீவிர வல­து­சாரி முஸ்லிம் வெறுப்­பா­ளர்கள் (Far Right Muslim Haters) ஒரு சிலர் மத்­தியில் நம்ப முடி­யாத விதத்தில் ஏற்­பட்­டி­ருக்கும் மன­மாற்­றத்தை கருத்தில் கொண்டும்,

(அண்­மைய உதா­ர­ணங்கள்: நெதர்­லாந்தின் தீவிர இஸ்­லா­மிய எதிர்ப்புக் கட்­சி­யான சுதந்­திர கட்­சியின் (PVV) முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் Van Klaveren மற்றும் அக்­கட்­சியின் முக்­கிய பிர­முகர் Arnoud Doorm ஆகியோர் இஸ்­லாத்தை தழு­வி­யி­ருப்­பது).

பொது நன்­மைக்­கா­கவும், ஒட்­டு­மொத்த இலங்கைப் பிர­ஜை­க­ளி­னதும் பாது­காப்­பான, சுபீட்­ச­மான எதிர்­கா­லத்­திற்­கா­கவும் ஒரு சில சம­ர­சங்­க­ளையும், விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளையும் மேற்­கொள்ள வேண்­டிய ஒரு நிலை­மாறு கால கட்­டத்தில் (Transitionary Period) நாங்கள் இருந்து வரு­கிறோம்.

அவ்­வாறு செய்­வதன் மூலம் முஸ்லிம் சமூ­கத்­திற்கு குறுங்­கால அடிப்­ப­டை­யிலோ அல்­லது நீண்ட கால ரீதி­யிலோ எத்­த­கைய இழப்­புக்­களும் ஏற்­படப் போவ­தில்லை. மறு­பு­றத்தில், தீவி­ர­வாத சக்­தி­களின் செயற்­பா­டு­களை தணிப்­ப­தற்­கான ஓர் உத்­தி­யா­கவும் அது இருந்து வர முடியும்.

2012 இல் திடீ­ரென பொது­பல சேனா இயக்கம் எழுச்­சி­ய­டைந்து, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்மப் பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்த பொழுது, ஒரு பிக்கு பின்­பற்ற வேண்­டிய ஒழுக்க சீலங்­களை ஞான­சார தேரர் மீறிச் செயற்­ப­டு­வதை குறி­யீ­டாக காட்டும் பொருட்டு தனது சஞ்­சி­கையில் “மச்சான், ஞான­சார!” என்ற தலைப்பில் ஓர் அட்டைப் படக் கட்­டு­ரையை வெளி­யிட்டார் சேபால் அம­ர­சிங்க. அத­னை­ய­டுத்து அவர் பல தட­வைகள் C I D அலு­வ­ல­கத்தில் ஏறி இறங்கி, அலைக்­க­ழிய வேண்­டியும் நேரிட்­டது.

இத்­தீர்ப்­பை­ய­டுத்து நன்கு பிரபல்யமான தனது யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர் இந்த விடயத்தை 2016 இல் நாட்டில் நிலவிய நிலைமைகளின் கண்ணோட்டத்தில் அன்றி, இன்று 2024 இல் நிலவி வரும் மாறுபட்ட நிலைமைகளின் கண்ணோட்டத்தில் நோக்குவது அவசியம் என்றும், ஒரு விதத்தில் ஞானசார தேரர் நமது அனுதாபத்திற்கு உரியவர் என்றும் கூறியிருக்கின்றார். அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென சேபால் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், அவ்விதம் மன்னிப்பு வழங்கக் கூடிய வழிமுறைகள் எவையேனும் இருந்து வருகின்றனவா எனப் பரிசீலித்துப் பார்ப்பது விரும்பத்தக்கது என முடிவாக கூறுகிறார்.

அவ்­வாறு அவ­ருக்கு மன்­னிப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென வேறு எவ­ரேனும் தரப்­புக்­களால் வேண்­டு­கோள்கள் முன்­வைக்­கப்­பட்டால் அவற்­றுக்கு எதிர்­வி­னை­யாற்­றாமல் இருப்­பதே இது தொடர்­பாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு உள்ள இரண்­டா­வது தெரி­வா­கும்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

+1 647 454 24 28

+1 647 215 0444

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc