( கனடா செல்வதை நாம் தடுக்கவில்லை பொய்களை நம்பி வாழ்கையினை அழிக்காதீர்கள் உண்மைகளை வெளிப்படுத்துங்கள் ஏழைகளை சிந்தியுங்கள்)
வரும் வருடம் இலங்கையில்பொருளாதார பிரச்சனை தலை விரித்தாடும் வரி அதிகரிப்பு வட்டி அதிகரிப்பு பொருள் விலை எற்றம் என வாழமுடியாத நிலை ஏற்படும்
இப்படி பல பிரச்சனை எற்பட்டு பொருளாதாரா நிலை வலுவான நிலையில் உள்ளவர்களே பாதிக்கபடலாம்
ஆகவே தயவு செய்து பொய்யான தகவல்களை பரப்பி ஏமாத்தி ஏழைகளின் வாழ்கையினை கேள்வி குறியாக்க வேண்டாம்
பொதுவாக சமுகவலைதளங்களில் பரப்படும் பல செய்திகள் தமது வியாபார மற்றும் சுயஇலாபத்திற்க்கு மட்டுமே
சில உதாரணங்கள்
விசா மறுக்க பட்டாலும் 3 4 தடவை முயற்சி செய்யுங்கள் முயற்சி கைவிடவேண்டாம் நிச்சயம்
கிடைக்கும்
இதனை பாத்த உடன் காணீ வீடு நகை அடகு வைத்து
வட்டிக்கு காசு போட்டு 4 ம் தடவை விசா போட்டு மறுக்கப்பட்டு நடுதெறுவில் வந்தது தான் மிச்சம்
( 2 தடைவைக்கு மேல் முயற்சிப்பதை தவிருங்கள்
2 தடவைக்கு மேல் போடும் விண்ணப்பம் 95% மறுக்க படும் )
கனடா வில் உறவு இல்லை எனினும் முயற்சி செய்யுங்கள் விசா கிடைக்கும்
நீங்கள் சொல்லும் கருத்துக்களை நம்பி வெளிநாட்டு மோகதில் இருக்கும் எமது மக்கள் கனடா வில் உறவு இல்லாம விசிட் விசா செய்ய ஆக குறைந்த 30 இலச்சம் தொடக்கம் 90 இலசம் வாங்கி செய்கின்றிர்கள்
விசா கிடைத்த உடன் பணம் செலூத்தி கனடா விமான நிலயத்தில் உறவு முறையினை உறுதி படுத்த தவறி திருப்பி அனுப்பி நாடு திரும்பி வேலை இழந்து வாழ்கை இழந்த 4 பேரை நான் அறிவேன் அவர்களின் வாழ்கையினை சிந்தியுங்கள் உண்மைகளை வெளிப்படுத்துங்கள்
விசிட் விசா இலகுவாக வேலை எடுக்கலாம் கனடாவில் முயற்சி செய்யுங்கள்
இந்த கதைய நம்பி நாட்டில் நல்ல பதவி நல்ல வருமான நிலையில் வாழ்ந்த பலர் கனடாவில் நினைத்த வருமானம் உழைக்க முடியாமல் இருக்கின்றனர்
தயவு செய்து
விசிட் விசா முதல் தடவை முயற்சி செய்பவராக இருந்தால்
கனடா வில் உண்மையான உறவுமுறை அவர்களின் அதரவு
மற்றும் சரியான ஆவணங்கள் இருந்தா நிச்சயமாக வலுவாக முயற்சி செய்யுங்கள் முதல் தடவை விசா பெறுவது நல்லது
மறுக்கபட்ட விசாவாக அதாவது உண்மையான ஆவணமாக இருந்தால் மேலும் ஓருதடவை சரியான முறையில் முற்சிக்கலாம் ஆனால் கிடைக்கும் சாத்தியம் 50 % மட்டுமே இது தான் உண்மை