ஒன்ராரியோ விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தந்தையும் சிறுமியும் மரணம்

ஒன்ராரியோ விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தந்தையும் சிறுமியும் மரணம்

கனடாவில் ஒன்ராரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்ட 40 வயதான தந்தையும் 3 வயது சிறுமியுமே உயிரிழந்துள்ளனர். கனடாவில் கடும் பனிப்பொழிவும் பனியால் வீதிகள் வழுக்குவதுமாக இருக்கிறது .

இந்நிலையில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த வேளை ,வீதியில் வழுக்கி பள்ளத்தில் சென்று விபத்துக்குள்ளானதாக   கூறப்படுகின்றது.

விபத்தை அடுத்து பதறிய தந்தை தனது மகளை வாகனத்தில் இருந்து மீட்டு , அதிவேக நெடுஞ்சாலையை கடக்க முற்பட்ட வேளை மற்றுமொரு வாகனம் அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி