ட்ரக் வண்டி சாரதி மீது துப்பாக்கிச் சூடு!

ட்ரக் வண்டி சாரதி மீது துப்பாக்கிச் சூடு!

டிரக் வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கெனடி மற்றும் ப்ரோக்ரஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சாரதி குறித்த டிரக் வண்டியின் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதன் பின்னரும் குறித்த ட்ரக் வண்டியின் சாரதி சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரையில் ட்ரக்கை செலுத்தி சென்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாகனம் ஒன்றில் இருந்த நபர் குறித்த சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை எதுவும் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் டொரட்டோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாகனங்களை இழுத்துச் செல்லும் டிரக் வண்டி ஒன்றின் சாரதியே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி