அமெரிக்க விமான விபத்து: 19 சடலங்கள் மீட்பு

அமெரிக்க விமான விபத்து: 19 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் இராணுவ ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது, இராணுவப் பயிற்சி ஹெலிகாப்டர் மோதியதில் புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.

பயணிகள் விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் பயணித்தனர். இராணுவ ஹெலிகாப்டரில் 3 வீரர்கள் பயணித்தனர்.

இந்த விபத்தில் பயணிகள் விமானம் போடோமாக் நதிக்குள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து, அவசரகால மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று புதன்கிழமை இரவு 9 மணியளவில் விபத்து நடந்த நிலையில், தேடுதல் பணியை வேகப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இதுவரை 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தை தொடர்ந்து வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி