மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய திட்டம்

மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்காவிட்டாலும், அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். செல்லவில்லை என்றால், இன்னும் சில நாட்களில் அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்பிப்போம். அதன்படி சட்டரீதியாக வௌியேற வேண்டி வரும். இப்போதே சென்று விட்டால் கௌரமாக இருக்கும். இனி அவரே யோசிக்க வேண்டும்" என்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி