தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய  சத்துரங்க ஹேரத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி