இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளதாகவும். இராமேஸ்வரம் மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி