அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தும் பணி ஆரம்பம் !

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தும் பணி ஆரம்பம் !

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணி தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார்.

டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது போன்றவற்றை வலியுறுத்தி டிரம்ப் பிரசாரம் செய்துவந்தார்.

205 இந்தியர்கள் நாடு கடத்தல்

இந்நிலையில் அதிபராக பொறுப்பேற்றதும், டிரம்ப் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக மெக்சிகோ எல்லையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் அவசர நிலையை பிரகடனப்படுதிய டிரம்ப், அங்கு சட்டவிரோதமாக குடியேறிய மக்களுக்கு எதிரான தணிக்கை மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி