கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

  1. கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் 25% வரி விதித்ததன் ஊடாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் போக்கைக் காட்டுகிறது.

இருப்பினும், கடந்த சில நாட்களில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் வரிகளின் தாக்கம் நீண்ட காலத்திற்கு எண்ணெய் தேவையை அச்சுறுத்துவதால் ஒட்டுமொத்த எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன.

ஏனைய நாடுகளுடனான ஒப்பந்தம்

கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெயை வழங்கும் இரண்டு முக்கிய வழங்குநர்களாகும். கனடா மற்றும் மெக்சிகோவுடன் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா எட்டியதன் காரணமாக எண்ணெய் விலைகள் ஓரளவு நிலையாகிவிட்டதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில், சீனா மீது அமெரிக்கா விதித்த 10% வரியை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க WTI கச்சா எண்ணெயின் விலை சுமார் 2% குறைந்தது. அதன்படி, ஒரு பீப்பாய் WTI எண்ணெயின் விலை $72க்கும் குறைவான விலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலையும் 1.2% குறைந்து $75ஆக பதிவானது. அமெரிக்காவின் வரி போன்று சீனாவினால் அமெரிக்க கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி ஏற்றுமதிகளுக்கு விதித்த 15% வரிகள் இதற்கு காரணமாகியுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி