ட்ரம்பின் அச்சுறுத்தல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

ட்ரம்பின் அச்சுறுத்தல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாகக் கூறும் ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மையானதுதான் என்று கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்திவரும் விடயம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மையானதுதான், அதாவது, ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக சும்மா சொல்லவில்லை என்கிறார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.

பழங்காலத்தில் வலிமையான மன்னர்கள் மற்ற நாடுகளைப் பிடிக்கும் ஆசையுடன் போருக்குப் புறப்பட்டதுபோல, அல்லது கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தானியா பல நாடுகளை தனக்கு அடிமைப்படுத்தினதுபோல, ட்ரம்புக்கும் நாடு பிடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதுபோல் தெரிகிறது.

 

சமீபத்தில், உக்ரைன் நாட்டிலுள்ள அரிய வகை தாதுக்கள் மற்றும் கனிம வளங்கள் ட்ரம்ப் கண் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதேபோல, கனடாவின் அரியவகை தாதுக்கள் மீதும் ட்ரம்ப் கண் வைத்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஆக, கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துவிட்டால் தனது ஆசையை நிறைவேற்றுவது ட்ரம்புக்கு எளிதாகிவிடும்.

எனவே, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் சும்மா சொல்லவில்லை. உண்மையாகவே அவர் கனடாவின் அரியவகை தாதுக்களுக்காக கனடா மீது கண் வைத்துள்ளார்.

இதற்காகத்தான் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக அவர் மிரட்டிவருகிறார் என்று கூறியுள்ளார் ட்ரூடோ.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி