அமெரிக்க வரி விதிப்பு குறித்து ஒன்றாரியோ மக்கள் கவலை

அமெரிக்க வரி விதிப்பு குறித்து ஒன்றாரியோ மக்கள் கவலை

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் ஒன்றாரியோ மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.ஒன்றாரியோவைச் சேர்ந்த 76 வீதமானவர்கள் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நனோஸ் ஆய்வு நிறுவனம் இது தொடர்பிலான கருத்துக் கணிப்பினை முன்னெடுத்துள்ளது.

சுமார் ஆயிரம் ஒன்றாரியோ பிரஜைகளிடம் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்திகளுக்கு 25 வீத வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி